MBBS, BDS படிப்புகளுக்கு நாளை (ஜூன் 06) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கால அவகாசம் குறைவதைத் தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.