ரேஸில் பங்கேற்கும்போது எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம என நடிகர்அஜித் சொன்னதாக இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். அவர் அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில், "நான் இந்த ரேஸில் பங்கேற்கும்போது எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் தான் நான் என்னுடைய கமிட்மென்டுகளை முடித்துவிட்டு செல்ல வேண்டும். ஏனென்றால், என்னை நம்பி 2 தயாரிப்பாளர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர்" என்று அஜித் கூறியதாக இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.