விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் (டிச.2024) பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட கிராமங்களை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது சிலர் சேற்றை எடுத்து வீசினர். இது குறித்து பாஜகவை சேர்ந்த விஜயராணி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அரசியல் காழ்புணர்ச்சியோடு மனுதாரர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறி விஜயராணியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.