உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் ஷிவாலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் மதன் ரத்தோர். இவரும், 16 வயது தலித் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பின்னர், இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். தொடர்ந்து, போலீசார் மதன் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் சிறையில் இருந்து மதன் வெளியே வந்தார். இந்த நிலையில், இவர்களது காதலுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் இருவரும் ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.