ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட மாத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் சிவாவுடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். எனவே தொடர்ந்து வழக்கறிஞரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தேவைப்படும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார். அவ்வாறு கைது செய்யப்பட்டால் கொலை வழக்கில் 6வதாக மேலும் ஒரு வழக்கறிஞர் கைது செய்யப்படுவார்.