வாட்ஸ்அப் செயலி மற்றொரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு வாட்ஸ்அப் சேனல்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சமீபத்தில் சேனல் உரிமையை வேறு ஒருவருக்கு மாற்றும் வசதியை வழங்கியுள்ளது. உரிமையாளர் தகுதியான பயனர்களின் பட்டியலிலிருந்து புதிய உரிமையாளரைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் ஒப்புதலுடன் சேனல் நிர்வாக உரிமைகளை மாற்றலாம். தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்.