வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி ரெப்போ வட்டி விகிதம் புள்ளி 50 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 6 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.