தமிழக பாஜக தலைமை பதவியை கைப்பற்ற வானதி சீனிவாசன் முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியான போது மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பெயரை தவிர்த்து வானதி பதிவிட்டிருந்தார். மேலும், டங்ஸ்டன் ரத்து விவகாரம் உள்ளிட்ட எக்ஸ் தள பதிவுகளில் மாநில தலைவர் பெயரை தொடர்ந்து தவிர்க்கும் வானதி சீனிவாசன், மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் தமிழக பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.