கொப்பரையின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியிருப்பது தமிழக தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவிட்டுள்ளார். மேலும், வரும் 2025ஆம் ஆண்டு பயிர் பருவத்தில் அரவைக் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, குவிண்டாலுக்கு ரூ.11,582 ஆகவும், பந்து கொப்பரை குவிண்டாலுக்கு ரூ.12,100 ஆகவும் உயர்த்தி வழங்கியதற்கு தென்னை விவசாயிகள் சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.