இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில், “ ராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள், சில நாட்களுக்கு முன்பு, கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.