பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரான அண்ணாமலை இன்று (ஜூன் 4) தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், “மக்கள் பணியில் சிறந்து விளங்க வேண்டும், இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து கூறியுள்ளார். அதேபோல், “அண்ணாமலையின் அரசியல் பணிகள் தொடர வேண்டும்” என மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், “துடிப்புடன் மக்கள் பணியாற்றிட எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என பாஜக மூத்த தலைவர் தமிழிசையும் வாழ்த்து கூறியுள்ளனர்.