அரசு இடத்தை ஆக்கிரமித்த காங்கிரஸ் பிரமுகரை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை வியாசர்பாடியில் அரசுக்குச் சொந்தமான பொது வழியை வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா ஆக்கிரமித்துள்ளார். அதனை மீட்க சென்ற அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காகவும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காகவும் அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.