கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கண்டித்து இன்று (டிச.27) காலை 10 மணிக்கு தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி, அண்ணாமலை தற்போது திமுக அரசை கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். சாட்டையை சுழற்றி ஓங்கி ஓங்கி 6 முறைக்கும் மேல் அடித்துக்கொண்டார். அப்போது, வெற்றிவேல் வீரவேல் என சுற்றி இருந்தவர்கள் கோஷம் எழுப்பினர். சில அடிகளுக்குப் பிறகு அவர்கள் அண்ணாமலையை தடுத்து நிறுத்தினர்.