திருமலைகேணியில் ஆனி மாத கார்த்திகை விழா

78பார்த்தது
திருமலைகேணியில் ஆனி மாத கார்த்திகை விழா
திண்டுக்கல் திருமலைக்கேணியில் ஆனி மாத கார்த்திகை விழாவையொட்டி மூலவர் சுப்ரமணிய சுவாமி, உற்சவர் முருகப்பெருமானுக்கும் பால், பழம், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின் லட்சார்ச்சனை, தீபாராதனைகள் நடந்தது.
பக்தர்கள் அரோகரா கோஷமிட கோவிலை வலம் வந்து தரிசனம் செய்தனர். திண்டுக்கல், சாணார்பட்டி, நத்தம், கோபால்பட்டி, செந்துறை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி