நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அந்த கடைக்குச் சென்ற சாராய வியாபாரி சண்முகம், இலவசமாக மளிகை பொருட்கள் கொடுக்கும்படி கேட்டுள்ளார். மேலும், மாமுல் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார். அதற்கு பாஸ்கரன் தர மறுக்கவே ஆத்திரத்தில் கடையில் இருந்த பொருட்களை சண்முகம் சேதப்படுத்தி, உரிமையாளரை தாக்கியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சண்முகத்தை தேடி வருகின்றனர்.