ஹாலிவுட் நட்சத்திரங்களான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் விவாகரத்து கோரி வழக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2014இல் திருமணம் செய்த இருவரும் 2016இல் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். தற்போது, இருவருக்கும் பொதுவான சொத்துகளை பிரித்து கொள்ள இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.