அன்புமணி பாமக நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கப்படவில்லை என பாமக தலைவர் ராமதாஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “செயல் தலைவராக உள்ள அன்புமணி நிர்வாக குழுவில் தொடர்வார்” எனவும் ராமதாஸ் தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாமக நிர்வாகக் குழுவுக்கு தனது பெயரையும் உள்ளடக்கி 21 பேர் கொண்ட புதிய பட்டியலை நேற்று (ஜூலை 5) ராமதாஸ் வெளியிட்ட நிலையில் அன்புமணி பெயர் இல்லாததால் அவர் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.