பாமக நிறுவனர் ராமதாஸ் காரை அன்புமணி ஆதரவாளர்கள் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவருக்கும் இடையே மேடையிலேயே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, பொதுக்குழு முடிந்தவுடன் வெளியேறிய அன்புமணியை சூழ்ந்துகொண்ட அவரது ஆதரவாளர்கள், ராமதாஸ் காரை மறித்து வாழ்க... வாழ்க... என முழக்கமிட்டனர்.