அன்புமணியின் பதவிக்காலம் நிறைவு - ராமதாஸ் அறிவிப்பு

56பார்த்தது
அன்புமணியின் பதவிக்காலம் நிறைவு - ராமதாஸ் அறிவிப்பு
தைலாபுரத்தில் இன்று (ஜூன் 12) செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், "பாமகவில் அன்புமணிக்கான தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்டது. நிறுவனரான நான் பொதுக்குழுவை கூட்டியபின் தலைவர் தேர்வு செய்யப்படுவார். பாமக கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன். அரசியலில் வாரிசு என்பது கிடையாது. உரியவரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். இளைஞர்கள், தொண்டர்கள் என அனைவரும் எங்களின் பக்கம் இருக்கிறார்கள். பாமக தலைவர் பொறுப்பில் இருந்து ஒருபோதும் அன்புமணியை நீக்கமாட்டேன்" என பேசினார்.

தொடர்புடைய செய்தி