பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பாமகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், பாமக சார்பில் ராமதாஸ் வழக்கமாக வெளியிடும் அறிக்கையில், நகல்: செயல் தலைவர் அன்புமணி என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இன்று வெளியான அறிக்கையின் நகல் அன்புமணிக்கு அனுப்பப்படவில்லை. இது அன்புமணி ஆதரவாளர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. அன்புமணியின் பெயர் இடம்பெறாத அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.