பாமக நிறுவனர் ராமதாஸை இன்று (ஜூன் 5) அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் நேரில் சந்தித்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள தலைவர் பதவி கருத்து மோதல் காரணமாக சர்ச்சை தொடருகிறது. இந்நிலையில், ராமதாஸ் - அன்புமணி இடையே நடந்த ஒருமணிநேர சந்திப்பு நிறைவுபெற்று, அவர் மீண்டும் புறப்பட்டுச் சென்றுவிட்டார். இவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்ததா? என்பது குறித்த விபரம் விரைவில் தெரியவரும். இந்த சந்திப்பில் அன்புமணியின் 3வது மகளும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.