பாமக தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து புதிதாக 21 பொறுப்பாளர்களை நியமித்து நிர்வாகக் குழு பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். புதிய நிர்வாகக் குழுவில் ஜி.கே. மணி, அருள், கவிஞர் ஜெயபாஸ்கரன், பேராசிரியர் தீரன், ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதன்மூலம் ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.