பாமக தலைவர் பதவி விஷயத்தில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர இருவரும் சந்திக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கட்சியின் நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், இன்று (ஜூன் 5) அதிகாலை அன்புமணி தைலாபுரம் புறப்பட்டார். தற்போது தைலாபுரத்தில் அன்புமணி தனது 3வது மகள் சஞ்யுத்ராவுடன் ராமதாஸை நேரில் சந்தித்துள்ளார். விரைவில் சந்திப்பின் காரணம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.