பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்திக்க விழுப்புரம் தைலாபுரம் இல்லத்திற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் புறப்பட்டுள்ளார். பாமகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த சந்திப்பு நடக்கிறது. பாமக மூத்த நிர்வாகிகளுடன் சென்று ராமதாஸை சமாதானம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்புமணி மீது அதிருப்தி அடைந்த ராமதாஸ், அண்மையில் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்துவிட்டதாக ராமதாஸ் தெரிவித்திருந்தார்.