சென்னை பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம் வைத்துள்ளேன், அங்கே என்னை வந்து பார்க்கலாம் என்று கூறிய நிலையில் பனையூர் அலுவலகத்திற்கு அன்புமணி ராமதாஸ் வந்தடைந்துள்ளார். புதுச்சேரியில் நடந்த பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அன்புமணியின் சகோதரியின் மகனான முகுந்தனுக்கு பதவி கொடுக்க அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் புதிய அலுவலகத்திற்கு வந்துள்ளார்.