பாமகவில் தலைமை பதவிக்கான யுத்தம் ராமதாஸ் - அன்புமணி இடையே தொடருகிறது. இதனிடையே, நேற்று (ஜூலை 5) தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ராமதாஸ், அன்புமணியின் செயல்பாடுகளை கட்சியினரிடம் கடுமையாக சாடியதாக சொல்லப்படுகிறது. மேலும், அன்புமணி செய்யும் விஷயங்களை கண்டுகொள்ளாமல் கட்சிப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள ராமதாஸ் பாமகவினருக்கு கட்டளையிட்டதாகவும் கூறப்படுகிறது. கட்சியை நானே வழிநடத்துவேன், நான் சொல்வதை செய்து முடியுங்கள் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.