ஆங்கிலத்தில் 'அம்னீசியா' என அழைக்கப்படும் நினைவாற்றல் இழப்பு ஏற்பட மூளைக்கு ரத்த ஓட்டம் குறைந்து இருப்பது முக்கிய காரணமாக அமைகிறது. ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். இதனால் நரம்பு செல்கள் சேதமடைந்து நினைவாற்றல் இழப்பு ஏற்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பு குறைவதால் மூளையின் நரம்பு செல்கள் தூண்டப்பட்டு ஞாபக மறதி ஏற்படும். சர்க்கரை நோயாளிகள் ஞாபக மறதியை எதிர்கொண்டால் மருத்துவர் உதவியை நாடுவது நல்லது.