மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் தினமும் மாலை வேளையில் அம்மன் வீதியுலா நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில் திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று (ஜூன் 2)இரவு பூத வாகனத்தில் அம்மன் நிறைந்த நிலையில் முக்கிய வீதிகளில் வீதி உலா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜைகள் ஆராதனைகளை செய்து வழிபட்டனர்.