தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியில்லாமல் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு 2026ல் ஆட்சி மாற்றத்தால் நிம்மதி கொடுக்க அமித் ஷா வந்துள்ளதாக அண்ணாமலை புகழாரம் சூட்டினார். மதுரையில் நடக்கும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்துக்கு வந்துள்ள அமித் ஷா குறித்து அண்ணாமலை மேடையில் பேசும்போது, "வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதங்களை விட்டுவிட்டு அகிம்சையை கையில் எடுக்க அமித் ஷாவின் செயல்கள் உதவியுள்ளன. விரைவில் நமது ஆட்சி ஏற்படும். மக்கள் மகிழ்வார்கள்" என பேசினார்.