மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூன் 07) இரவு மதுரை வருகை தருகிறார். நாளை நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அவர் நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார். அதிமுக கூட்டணியுடன் இணைந்து இணக்கமாக பணியாற்றுதல், தேர்தல் பணிகள், வாக்குச்சாவடி முகவர்கள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து நிர்வாகிகள் செயல்படவும் அறிவுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.