பாஜக தேசிய தலைமை மாற்றம் தொடர்பான பணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழு கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற ஜூலை 8ஆம் தேதி சென்னை வர இருப்பதாகவும், அப்போது கூட்டணி கட்சி தலைவர்களைச் சந்திக்க திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது அமித் ஷாவின் சென்னை வருகை ரத்தாகி உள்ளது.