அமித்ஷா வருகை.. விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

57பார்த்தது
அமித்ஷா வருகை.. விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
தமிழக பாஜக தென்மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ( ஜூன் 7) இரவு 8:30 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். மதுரை சிந்தாமணி சுற்றுச்சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கும் அவர், நாளை (ஜூன் 8) காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அமித்ஷாவிற்கு பாதுகாப்பு வழங்க ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி