நடுரோட்டில் வைத்து அமித்ஷா உருவ பொம்மை எரிப்பு

50பார்த்தது
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிணைந்து, அமித்ஷாவின் உருவ பொம்மையை காலணிகள் கொண்டு அடித்தனர். தொடர்ந்து அந்த உருவ பொம்மையை எரித்தனர். மேலும், பல்வேறு கட்சியினரும் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அம்பேத்கார் குறித்து அமித்ஷா பேசிய பேச்சு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: PTINews

தொடர்புடைய செய்தி