நீண்ட தூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 175 பில்லியன் டாலர் மதிப்பிலான "கோல்டன் டோம்" என்ற திட்டத்தை நேற்று அறிவித்தார். இதன்மூலம் முதல் முறையாக அமெரிக்கா, ஆயுதங்களை விண்வெளியில் வைக்கும் என்றும், 2029-ம் ஆண்டின் தொடக்கத்தில் தனது பதவிக்காலம் முடியும்போது அவை முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். இந்த திட்டம் இஸ்ரேலின் அயன் டோம் திட்டத்தை போன்றது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.