தேர்தல் நடத்தை விதிகள் [93 (2) (அ)] திருத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "தேர்தல் தொடர்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மீது தாக்குதல் நடந்துள்ளது. மக்களாட்சிக்கு விரோதமான இந்த தாக்குதலை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.