தென்காசி: அம்பேத்கர் குறித்து பேசுவது ஃபேசனாகி விட்டது என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதற்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “அம்பேத்கர்னா ஃபிளவர் இல்லடா ஃபயர்” என புஷ்பா படத்தில் வரும் வசத்தை சுட்டிக்காட்டி பேசினார். மேலும், “அம்பேத்கர் என்றால் ஃபயர், அதனால் தான் அம்பேத்கர் விவகாரம் நாடு முழுவதும் ஃபயராகி கொண்டிருக்கிறது” என்றார். சங்கரன்கோவில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறு பேசினார்.