குழிப்பேரி என்று அழைக்கப்படும் பீச் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் செய்கிறது. இவற்றில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. மாதவிடாய் நின்ற பெண்கள் ஒரு நாளைக்கு 2 பீச் பழம் சாப்பிட்டால், மார்பக புற்றுநோய் அபாயம் குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நார்ச்சத்துகள் நிறைந்த இந்த பழம் செரிமான செயல்பாட்டை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.