'ஆடாத உடலும் ஆடும், பாடாத வாயும் பாடும்' எனும் சித்தர்களின் வாக்குக்கேற்ப, ஆடாதோடை மூலிகையை முறையாக, உண்டுவர உடல் நலம் தேறி மனதில் உற்சாகம் பிறக்கும். ஆடாதோடை இலைகள் நுரையீரலில் உள்ள செல்களை சரிசெய்து, சுருங்கி விரியும் தன்மையை சீராக்குவதால், ஆஸ்துமா, இருமல் சளி போன்ற சுவாசக்கோளாறுகளை குணமாக்கும். ஆடாதோடை இலைகளை பொடியாக்கி, நீரில் கலந்து குடித்துவந்தால் தசை வலிகள் நீங்கிவிடும்.