நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த "புஷ்பா 2" திரைப்படத்தின் சிறப்பு காட்சி கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்தது. இதனை காண்பதற்காக சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். தாய் உயிரிழந்த நிலையில் சிறுவனின் சிகிச்சைக்காக ரூ.2 கோடி வழங்கப்படும் என்று அல்லு அர்ஜுன் தந்தை தற்போது அறிவித்துள்ளார்.