சனிக்கிழமை பத்திரப்பதிவு செய்ய அனுமதி

57பார்த்தது
சனிக்கிழமை பத்திரப்பதிவு செய்ய அனுமதி
பொதுமக்களின் நலன் கருதி சனிக்கிழமை சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கான (ஆகஸ்ட் 10) சனிக்கிழமை அன்று பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 10-ம் தேதி காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை அலுவலகங்கள் இயங்கும் என்று அறிவித்துள்ளது. மேலும், விடுமுறை நாள் ஆவணப் பதிவுக்கான கட்டணத்தை சேர்த்து வசூலிக்க பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி