திருமாவளவனுடன் கூட்டணி..? - சீமான் பரபரப்பு பேட்டி!

24743பார்த்தது
திருமாவளவனுடன் கூட்டணி..? - சீமான் பரபரப்பு பேட்டி!
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், 'விஷசாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் நிதியுதவி செய்வதுதான் திராவிட மாடல். திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடியாது. வடமாவட்டங்களில் திமுக வெற்றி பெற்றதற்கு திருமாவளவன் தான் காரணம். திருமாவளவனை கூட்டணியில் இருந்து வெளியே விட மாட்டார்கள். நாம் தமிழருடன் கூட்டணி வைப்பதை திருமாவளவன் தான் முடிவு செய்ய வேண்டும். எங்கள் கோட்பாடுகளை ஏற்று யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்' என்றார்.

தொடர்புடைய செய்தி