பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுக்கோட்டை அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ்.முகமது கனி ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "பாசிச பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.