பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சேலத்தில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 19) நடைபெற்று வருகிறது. அதில் பேசிய அன்புமணி, 'என் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் 100% பொய்யானவை. இன்னும் சில நாட்களில் நான் அதை தெளிவாக தெரியப்படுத்துவேன். கட்சிக்காக என் மனம் பெரும் சுமையை சுமந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவிற்கு பல சாதனைகளை நமது கட்சி செய்துள்ளது' என என தெரிவித்துள்ளார்.