கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் விற்பனை செய்ததாகக்கூறி நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். தற்போது சிறையில் உள்ள அலிகான் துக்ளக் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமின் மனுவை நாளை (டிச.24) நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. முன்னதாக தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.