குடியரசு தினமான நேற்று (ஜன. 26) தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. அதே நேரம் சில இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை அடுத்து உள்ள பல பகுதிகளில் மதுபான விற்பனை படுஜோராக நடைபெற்றது. பீரின் விலை ரூ. 300-க்கும், குவார்ட்டர் விலை ரூ. 250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.