செங்கல்பட்டில் முதியவர் பாம்பை மாலைபோல் தோளில் போட்டு மது வாங்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மேம்பாலம் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தோளில் சுமார் 7 அடி நீள பாம்பை சுற்றியபடி வந்தார். இதனை கண்டு மதுவாங்க வரிசையில் நின்ற குடிமகன்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து அந்த பாம்பை அந்த முதியவர் தனது லுங்கிக்குள் போட்டு மடித்து கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.