உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக் கால் நடப்பட்டது. தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழாக் காலம் கலைகட்டத் தொடங்கியுள்ளது. இதனையொட்டி, வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த நிலையில்,
மதுரை அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு முகூர்த்தக் கால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர்
சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டார்கள். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 17ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
புகைப்படம்: சன் செய்திகள்