அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, காவலர்கள் தன்னை தாக்கியதாக அவரது தம்பி நவீன் வாக்குமூலம் அளித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவப் பரிசோதனையில், காவலர்கள் தாக்கியதில் நவீனுக்கு இடதுகாலில் ரத்தக்கட்டு இருப்பது உறுதி ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காயம் தொடர்பாக நவீனிடம் திருப்புவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நேரில் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து, எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த நவீன், தான் தாக்கப்பட்டதாக வாக்குமூலமும் அளித்துள்ளார்.