சிவகங்கை: திருபுவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கு தொடர்பாக டிஎஸ்பியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புகாரை எழுத்துப்பூர்வமாக பெறுவதற்கு முன்பாகவே தனிப்படை போலீசாருக்கு விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகை திருட்டு போனதாக
நிகிதா என்பவர் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் அஜித்குமாரை அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.