ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கும், வெங்கட தத்தா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று (டிச. 24) ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொள்ளாத நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினி மற்றும் 2 குழந்தைகளுடன் சிந்து திருமண வரவேற்பில் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினார்.